குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கி இருக்கும் சூழலில் வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில் அதிரை இளைஞர்கள் பலரும், தங்கள் சிகை அலங்காரத்தை களைந்து மொட்டை அடித்துள்ளனர். இதுகுறித்து இளைஞர் ஒருவர், தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், நாங்கள் வீடுகளிலேயே அடைந்துகிடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ஒருவித மன அழுத்தத்தை உணர்ந்தேன். தலைவலி அதிகமாக இருந்தது. இந்த சூழலில் பெரியோரின் ஆலோசனை படி மொட்டை அடித்த பிறகு அவ்வாறான பிரச்சனை எனக்கு இல்லை. மிகவும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன் என்கிறார்.
இவ்வாறு பல இளைஞர்கள் மொட்டை அடிக்க வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும், கோடைக்காலத்தில் சோர்வை களைய இது வாய்ப்பாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
Your reaction