வாய்பிளக்க வைக்கும் டிஸ்பிளே அளவுடன் ரெட்மீ நோட் 5.!?

2684 0


சியோமி நிறுவனம் அதன் முழு டிஸ்பிளே கொண்ட அதாவது 18: 9 என்ற காட்சி விகிதம் அளவிலான அதன முதல் ரெட்மீ ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

சியோமி தற்போது அதன் மி மிக்ஸ் மற்றும் மி மிக்ஸ் 2 ஆகிய கருவிகளில், எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே அமைப்பை கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பானது நிறுவனத்தின் அடுத்த ரெட்மீ கருவியிலும் காணலாம் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள டிஇஎன்ஏஏ (TENAA) பட்டியல் மூலம் அறியப்படுகிறது.

 

அதாவது அனைத்து பக்கங்களிலும் மிக மெல்லிய பெஸல்கள் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேவை அடுத்த ரெட்மீ ஸ்மார்ட்போனில் எதிர்நோக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 5 ஆக இருக்க முடியும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

 

முன்னர் வெளியான கசிவுகளும் இதே அளவையே குறிப்பிடுகின்றன. இந்த சியோமி ஸ்மார்ட்போனின் இதர வடிவமைப்பு பற்றி பேசுகையில், வழக்கமான முன்பக்க பொத்தான்கள்.
பின்புறத்தை பொறுத்தமட்டில், மையத்தில் கேமரா வைக்கப்பட்டுள்ளது, உடன் கைரேகை சென்சார் மற்றும் மி லோகோவும் காட்சிப்படுகிறது. ரெட்மீ நோட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கலாம்.

 

பிற ரெட்மீ ஸ்மார்ட்போன்களில் காணப்படும் உலோகத் தோற்றத்திலேயே இதுவும் காணப்படுகிறது. அதன் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில், கூறப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.

 

இது முழுஎச்டி+(18: 9) திரை தீர்மானங்களை ஆதரிக்கும். 64-பிட் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் வெளி வரலாம்.

கேமராத்துறையை பொறுத்தமட்டில், சாத்தியமான ஒரு இரட்டை கேமரா தொகுதி இடம்பெறும். அது 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார் ஆக இருக்க வாய்ப்புள்ளது. முன்பக்கம் ஒரு 12எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கலாம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: