Thursday, March 28, 2024

அதிரை காதர் முஹைதீன் கல்விக் குழுமத்தின் அலுமினி அஸோசியேசன் ஏன் ?

Share post:

Date:

- Advertisement -

 

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், அவர்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும், அவர்கள் நலமோடு வாழ வேண்டும் என்பதற்காக அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த வள்ளல் ஹாஜி M.K.N. காதிர் முஹைதீன் அவர்களால் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தானமாக வக்ஃப் செய்யப்பட்டு 1900ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் *M.K.N. மதரஸா டிரஸ்ட்* என்ற தனியார் தொண்டு நிறுவனம்.

இந்த வள்ளல் பெருமகனோடு இவர்களின் உடன் பிறந்த சகோதரர்களான ஜனாப். M.K.N. நெய்னா முஹம்மது மரைக்காயர், ஜனாப். M.K.N. அஹமது தம்பி மரைக்காயர், ஜனாப். ஹாஜி. M.K.N. ஷேக் சலாத் லெப்பை மரைக்காயர் ஆகியோரும் தங்களது சகோதரரின் முயற்சிக்கு பக்கபலமாக தங்களுக்கு சொந்தமான நிலங்களை வாரிவழங்கி இந்த அறக்கட்டளையை தொடங்க ஒத்துழைத்தார்கள்.

அதன் பயனாக எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் தொடங்கப்பட்டு அதன் மூலம் அதிரையில் தற்போது நூற்றாண்டுகளை கடந்து நடைபெற்று வரும் *’ஸலாஹிய்யா அரபி மதரஸா’* அதன் முதலாவது கல்வி நிறுவனமாக தொடங்கப்பட்டது.

ஆண்டுகள் நகரத் தொடங்கின. அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களும் முறையாக கல்வி கற்க வழியின்றி துயறுற்று இருப்பதை கருத்தில் கொண்டும், கல்வித்தாகம் உடையவர்கள் தொலைதூரத்திற்கு சென்று கல்வி கற்கவேண்டிய சிரமமான நிலையை போக்கும் வகையிலும், ஒரு பெரும் முயற்சியை எடுத்தாகவேண்டும் என்றென்னிய அன்றைய எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகத்தினர், கல்வித் தந்தை ஹாஜி எஸ் எம் எஸ் ஷேக் ஜலாலுதீன் அவர்கள் தங்களின் அயராத முயற்சியின் காரணமாக 1949ம் ஆண்டு வள்ளல் *காயிதே மில்லத் சாகிப்* அவர்கள் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு அரசு உதவியுடன் நடைபெறும் வகையில் *’காதிர் முஹைதீன் உயர்நிலைப் பள்ளியை’* அதிரையில் தொடங்கினார்கள்.

அதன் பின் சில ஆண்டுகளிலேயே 1955ம் ஆண்டு அன்றைய நிதி அமைச்சர் *சி.சுப்பரமணியம்* அவர்களின் முன்னிலையில் நம்முடைய *’காதிர் முஹைதீன் கல்லூரி’* துவங்கப்பட்டு இன்று சுமார் முப்பது பாடப்பிரிவுகளுடன் வளர்ச்சியடைந்து சிறப்பான முறையில் கல்விச் சேவையாற்றி வருகின்றது.

இந்நிலையில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பெண்கள் கல்வி கற்க தேவையான வசதிகள் இல்லாததை கருத்தில் கொண்டு கல்லூரி தொடங்கி சுமார் 27 ஆண்டுகள் கழித்து பெண்களுக்கென்றே தனியாக மேல்நிலைப் பள்ளியை 1982ம் ஆண்டு உறுவாக்கினார்கள் அன்றைய M.K.N மதரஸா டிரஸ்டின் செயலாளர் கல்வித் தந்தை ஹாஜி எஸ் எம் எஸ் ஷேக் ஜலாலுதீன் அவர்கள்.

இப்படி பல்வேறு வகையில் நமதூர் மற்றும் நமது சமூகத்தின் நலன் கருதி கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த M.K.N மதரஸா டிரஸ்டின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள் இன்று ஆலமரம்போல் வளாந்திருப்பதே இதன் முன்னோர்களின் தியாகத்திற்கு மிகச்சிறந்த சாட்சியாக விளங்கிக்கொண்டிருக்கின்றது.

இந்த கல்விக்குழுமத்தின் மூலம் கல்வி பயின்றவர்கள் இன்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றார்கள். இவர்கள் உலகின் எல்லாத் துறைகளிலும் பங்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த கல்விக்குழுமத்தின் மூலம் கல்விபயின்றவர்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லுகின்ற அளவுக்கு இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது. இங்கு பயின்றவர்கள் அரசுத் துறையின் பல்வேறு பதவிகளிலும், நீதித்துறைகளிலும், அரசியல் கட்சிகளிலும், கல்வித்துறையிலும், மருத்துவத்துறையிலும், பொறியியல் துறை என்று இப்படி இதில் கல்விகற்றவர்களின் பங்களிப்புகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

அப்படிப்பட்ட நமது முன்னால் மாணவர்களை அடையாளம் கானும் வகையிலும் அனைத்து முன்னாள் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையிலும் தற்போது நமது கல்விக்குழுமத்தில் படித்த முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் – *’அலுமினி அசோசியேசனை’* நாம் தொடங்கி இருக்கின்றோம்.

இதன் மூலம் நமது முன்னாள் மாணவர்களை கண்டெடுத்து அவர்களை ஒருங்கினைப்பது, பல்வேறு துறைகளில் இருக்கும் அவர்களுக்குள் ஒரு பாலமாக இருந்து செயல்படுவது, அவர்கள் மூலம் நமது கல்லூரியை மென் மேலும் வளர்ச்சியடைய செய்வது, அவர்கள் மூலம் நமது கல்விக்குழுமத்தை தரம் உயர்த்துவதற்கான ஆலோசனைகளை பெறுவது, அவர்கள் மூலம் நமது கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான கல்வி உதவிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவது, அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது போன்ற பணிகளை செய்ய இருக்கின்றோம்.

எனவே முன்னாள் மாணவர்களான எமது கண்மணிகள் உங்களுக்கு கல்வி தந்த, நீங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய உதவியாக இருந்த நமது கல்விக்குழுமத்தின் இந்த முயற்சிக்கு உங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் நீங்கள் இந்த அலுமினி அசோசியேசனில் இணைந்துகொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
நிர்வாகம்
எம் கே என் மதரஸா டிரஸ்ட்

Please register your detail in below links:

Khadir Mohideen College

http://mkntrust.com/kmc-alumni

Khadir Mohideen Boys School

http://mkntrust.com/khadir-mohideen-boys-higher-secondary-school-alumni

Khadir Mohideen Girls School

http://mkntrust.com/khadir-mohideen-girls-higher-secondary-school-alumni-2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...