மூத்தவர்கள் முரண்டு பிடிப்பதால் திக்குமுக்காடும் திமுக!!

1109 0


கருணாநிதி மறைவுக்கு பின் தி.மு.க வின் தலைமைப் பொறுப்புக்கு வந்த அவரது மகன் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி நிர்வாகிகள் ஆதரவு அளித்து தலைவராக்கினார்கள்.

மூப்பு காரணமாக முடங்கிய அன்பழகன் மனதில் என்ன இருந்தது என்று தெரியாத நிலையிலேயே அவர் மரணமடைந்தார்.

அன்பழகன் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு வருகிற 29 ந் தேதி பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என்று ஸ்டாலின் முதலில் அறிவித்தார்.

அறிவிப்பு வந்த சில நாளில் தன் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த தற்போதுள்ள மூத்த தலைவர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இதையடுத்து வருகிற 29-ந் தேதி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று ஸ்டாலின் மாற்றி அறிவித்தார்.

இதன் பின் தி.மு.கவில் பதவிச் சண்டை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

கட்சியின் பொருளாளர் பதவியை பிடிக்க, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி, போன்ற எம்.எல்.ஏ க்களும், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆண்டிமுத்து ராசா போன்ற எம்.பி.க்களும் மோதுகின்றனர்.

ஐ.பெரியசாமி ஸ்டாலின் குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

சீனியாரிட்டி படி பதவி என்றால் எனக்குத் தான் தர வேண்டும் என்று டி.ஆர் பாலு அடம் பிடிக்கிறார்.

பொருளாளர் பதவியில் இருப்பவர் கட்சிக்கு நிதி சேர்க்க வேண்டும்,

அந்த தகுதி எங்களுக்குத்தான் உண்டு என்று ஜெகத் ,ராசா, வேலு போன்றவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

உச்சகட்டமாக ஐ.பெரியசாமி சென்ற வாரம் முழுவதும் சட்டசபைக்கு வராமல் புறக்கணிதார்.

இதனிடையே நேற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய டி.ஆர்.பாலு ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறார்.

கட்சியில் சீனியரான என்னை பொருளாளர் ஆக்குங்கள் ,

இல்லை என்றால் பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆவதற்கு அனுமதி அளியுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி தி.மு.கவுக்கு துணை சபாநாயகர் பதவி தரேன் என்கிறார், ஆனால் தலைமையிடம் இருந்து கடிதம் கேட்கிறார்.

அதை தாருங்கள் என்று அடம் பிடித்திருக்கிறார்.

இதையே ஜெகத்ரட்சகன், ராசா, ஆகியோரும் சொல்கிறார்கள்.

எ.வ.வேலு மட்டும் என்னால் தளபதிக்கு சங்கடம் வேண்டாம் என்று கூறி போட்டியில் இருந்து விலகிக் கொண்டாராம்.

இந்த பதவி சண்டையால் மு.க.ஸ்டாலின் முக்காடி டாத குறையாக திணறி வருகிறார்.

மேலும் துண்டு சீட்டு பார்த்து கூட ஒழுங்காக ஸ்டாலினால் பேச முடியவில்லை என்று கூறும் வகையில் மறைமுகமாக சட்டசபையில் மின் துறை அமைச்சர் தங்கமணியை துரைமுருகன் துண்டு பேப்பர்கையில் இல்லாமல் பேசியது கெத்து என்று பாராட்டியது ஸ்டாலினை கடுப்படிக்க வைத்துள்ளது.

துரைமுருகனை நம்ப வேண்டாம் என்னை பொதுச் செயலாளர் ஆக்குங்கள் என்று நேரு கேட்கிறார்.

தி.மு.க வின் பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்தலால் கட்சியில் பெரும் குழப்பம், நிலவி வருவதால் ஸ்டாலின் குடும்பத்தார் செய்வதறியாது திகைத்து நிற்பதாக சித்தரஞ்ஞன் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: