உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாளை நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் முஹல்லா ஜமாத் சார்பில் வீடுகளுக்கு சென்று கொரோனா குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முஹல்லா ஜமாத் செயலாளர் முஹம்மது சித்தீக், இணை செயலாளர் ஜெகபர் சாதிக் ஆகியோர் தலைமையில் இளைஞர்கள் பலர் வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





Your reaction