Wednesday, April 24, 2024

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்..!!

Share post:

Date:

- Advertisement -

பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால், இரு அவைகளிலும் நிர்பயா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேர் தான் குற்றவாளிகள் என போலீஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, பாலியல் வன்கொடுமையால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு உடல்நிலை மோசமானதால், அவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அனுப்ப மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. அதன்படி, டிசம்பர், 29 ஆம் தேதி சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவ மாணவி நிர்பயா சிங்கப்பூரிலேயே உயிரிழந்தார்.”

நிர்பயா உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நீதிமன்றத்தில் சிறார் குற்றவாளிக்கு மட்டும் 3 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 5 பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2013-ஆம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

மற்ற 4 பேரின் தூக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். எனினும் தூக்கில் இருந்து தப்பிக்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங். இதனால், ஏற்கனவே 2 முறை நாள் குறிக்கப்பட்டும் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப் போனது. இப்போது, 3-வது முறையாக மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5.30க்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நாள் குறிக்கப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று அதிகாலை சரியாக 5.20 மணி சுமாருக்கே தூக்கு நிறைவேற்றப்பட உள்ள திகார் சிறைக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குழுமினர். இந்நிலையில் சரியாக இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...