குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கும் மத்திய அரசுக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை கண்டித்து மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்கள் குரல் கொடுத்து வந்தனர்.
முதல் கட்ட போராட்டம் தொடர்ந்து, கண்டனப் பேரணிகள், கண்டனப் பொதுக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, தேசிய கோடி ஏந்தி பேரணி, மதநல்லிணக்கப் பேரணி, பெண்கள் பேரணி மாநாடுகள் என நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக, தொடர் இருப்பு போராட்டம், தர்ணா போராட்டம் என அதை தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான இடங்களில் தலைநகர் டெல்லியில் முதல் புரட்சியான ஷாஹீன் பாஃக் என்கிற தொடர் முழக்க போராட்டத்தை முன் வைத்து தமிழகத்திலும் ஷாஹீன் பாஃக் போராட்டங்கள் நடைபெற்று வருன்றன.
இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டங்களை முன்னெடுத்ததும் ஆளும் அரசுகளுக்கு அழுத்தம் இருந்த காரணமாக தொடர் போராட்டம் ஷாஹீன் பாஃக் போராட்டங்கள் மூலமாக தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விடும் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அதற்கெல்லாம் தமிழக அரசு செவிசாய்க்காமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அறிவித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களது மூன்றாம் கட்ட போராட்டத்திற்கு மும்முரமாகி வருகின்றனர்.
Your reaction