நாடெங்கிலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய போராட்டத்தில் நடந்த விரும்பாத காவல்துறையின் செயல்பாட்டால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவியது.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தொப்புள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி தமிழக சட்டபேரவையில் குடியுரிமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டன.
ஆனால் தமிழக அரசு நேர்மாறாக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்து விட்டார்.
இதனிடையே எதிர்வரும் ரமலான் நோன்பு கஞ்சிக்காக தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை பெற விண்ணப்பித்து வருகிறார்கள்.
நமது கோரிக்கையை செயல்படுத்த முன் வராத அரசிடம் இருந்து அரிசி வாங்குது ஏற்புடையதா? என ஜமாத் முத்தவல்லிகள் உணர வேண்டும்.
ஒட்டுமொத்த பள்ளிவாயில்களும் அரிசியை வாங்கமல் புறக்கனிக்க வேண்டும் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.
இது குறித்து அந்தந்த ஜமாத் முத்தவல்லிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Your reaction