நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி?

3001 0


டெங்கு காய்ச்சல், தமிழகத்தில் பல இடங்களில் வெகுவாக பரவி வருவதை நாம் படிக்கும் அன்றாடசெய்திகள் சொல்கின்றன. டெங்கு காய்ச்சல் எவ்வாறு மக்களை சென்றடைகிறதோ அதேப்போல் நிலவேம்பு கசாயமும் எல்லா இடங்களிலும் மக்களுக்கு பரிட்சியமாகிவிட்டது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. நிலவேம்புப் பொடியை வைத்து, நில வேம்பு கசாயம் தயாரிப்பது குறித்து மிக எளிமையான தயாரிப்பு முறைகளைச் சொல்லித் தருகிறார் சித்தமருத்துவர் வீரபாபு.

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?

டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியால் பரவக்கூடியது. இதைப் பரப்பும் வேலையைச் செய்கிறது கொசு.

டெங்கு காய்ச்சல் என்ன செய்யும்?

டெங்கு வைரஸ் உடலுக்குள் பரவும்போது இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுகளை அழிக்க ஆரம்பிக்கும். இந்த ரத்தத் தட்டுக்கள் அழிக்கப்பட்டால் உள்ளுறுப்புகளில் இரத்தம் கசிந்து மரணம் ஏற்படலாம்.

நிலவேம்புப் பொடி!

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது; அடுத்து பனிக்காலமும் வர இருக்கிறது. டெங்கு காய்ச்சலும் பரவும் சூழலில் நிலவேம்பு கசாயம் தடுப்பு மருந்தாகவும் குணப்படுத்தும் மருந்தாகவும் நமக்குக் கைக்கொடுக்கிறது. இரத்தத்தட்டுகளை அழிக்கும் வைரஸை அழிக்கக் கூடியது இந்த நிலவேம்பு.

நிலவேம்புப் பொடி எங்கு கிடைக்கும்?

நிலவேம்புப் பொடி தமிழகத்தின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

நிலவேம்புப் பொடியை எப்படி பயன்படுத்துவது?

நிலவேம்புப் பொடியை கசாயமாகக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். நிலவேம்புப் பொடியில் நில்வேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிட்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற ஒன்பது விதமான மூலிகைகள் உள்ளன. இவை அனைத்தும் திப்பியாக அரைக்கப்பட்டு ‘நிலவேம்புப் பொடி’யாகக் கிடைக்கிறது.

நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி?

நிலமேம்புப் பொடி 10 கிராம் எடுத்துக்கொண்டு 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும்போது, அதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இது ஒரு நபருக்கான அளவு.

யாரெல்லாம் நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது?

ஏழு வயது குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது. அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக..

  1. வீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடிக்க ஆரம்பிக்க வேண்டும். மூன்று, நான்கு நாட்கள் தள்ளிப்போடுவது ஆபத்தை நோக்கிப் பயணிக்க வைக்கும். ஆபத்தான நிலைமையில் பப்பாளிச்சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா ஆலோசனைகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி செய்ய வேண்டும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: