டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. கு றிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட பலர் பலியாகி உள்ளனர்.
இந்த கலவரத்தை அடுத்து இஸ்லாமியர்கள் மற்றும் தொப்புள்கொடி உறவுகள் பலர் உயிர் நீத்துள்ளனர்.
இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு அதிராம்பட்டினம் சாகீன்பாக் அரங்கில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில் அதிரை சாகீன்பாக் போராட்ட அரங்கில் பங்கெடுத்தவர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
Your reaction