பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு !

840 0


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக் குழு, கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தானி மலபார் ஹவுஸில் நடைபெற்றது. புதிய தேசியத் தலைவராக O.M.A. சலாம் அவர்களும், புதிய தேசிய பொதுச் செயலாளராக அனிஸ் அகமது அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நிர்வாகிகள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

E.M.அப்துல் ரஹ்மான் (தேசிய துணைத் தலைவர்), அப்ஸர் பாஷா (தேசிய செயலாளர்), V.P.நஸ்ருத்தீன் இளமரம் (தேசிய செயலாளர்), K.M.ஷரீஃப் (பொருளாளர்), E.அபுபக்கர் (தேசிய செயற்குழு உறுப்பினர்), P.கோயா (தேசிய செயற்குழு உறுப்பினர்), M.முஹம்மது அலி ஜின்னா (தேசிய செயற்குழு உறுப்பினர்), அப்துல் வாஹித் சேட் (தேசிய செயற்குழு உறுப்பினர்), A.S. இஸ்மாயில் (தேசிய செயற்குழு உறுப்பினர்) மற்றும் வழக்கறிஞர் முகமது யூசுப் (தேசிய செயற்குழு உறுப்பினர்).

மூன்று நாள் நடைபெற்ற தேசிய பொதுக் குழு கூட்டத்தை (NGA) 21.02.2020 அன்று ஓ.எம்.ஏ சலாம் அவர்கள் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். தேசிய பொதுக் குழு கூட்டம் (NGA) என்பது நாடு முழுவதிலுமிருந்து வரும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வருடாந்திர கூட்டமாகும். இதில் அமைப்பின் கடந்த ஆண்டு நடவடிக்கைகள் குறித்த ஆய்வும் வரும் ஆண்டுகளுக்கான திட்டமிடலும் இடம்பெறும்.

ஓ.எம்.ஏ. சலாம் தனது தலைமை உரையில், இந்திய மக்களின் பணத்திலிருந்து உயர்தட்டு மக்கள் மற்றும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் இந்துத்துவ ராஷ்டிரம் இன்று எதார்த்தமாக வெளிப்படுகிறது என்று கூறினார்.

நாட்டின் 64 கார்ப்பரேட்டுகளின் மொத்த சொத்து மதிப்பு 28 லட்சம் கோடி ஆகும், அதே நேரத்தில் 130 கோடி இந்தியர்களுக்கான தேசிய பட்ஜெட் 24 லட்சம் கோடி மட்டுமே. இது கார்ப்பரேட்களின் மொத்த சொத்து மதிப்பை விட குறைவாகும். ஏற்கனவே குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட அரசியலமைப்பை உத்தியோகபூர்வமாக மாற்றுவது, இந்துத்துவா ராஷ்டிரா கட்டுமானத்தை முடித்துவைக்க மீதமுள்ள ஒரே படியாகும்.

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான மத்திய அரசு அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களையும் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக வழிமுறைகளையும் அழித்துவிட்டது. இந்தியாவை ஒரு வகுப்புவாத மற்றும் சர்வாதிகார நாடாக மாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் கடந்த மூன்று தசாப்தங்களாக நாங்கள் சொல்லிக்கொண்டிருப்பது உண்மையாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைப் பற்றிய எங்கள் எச்சரிக்கைகளை குறைத்து மதிப்பிட்டவர்கள் இப்போது குடியுரிமை உரிமைக்கான போராட்டங்களில் மக்களை வீதிக்கு கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். நமக்கு ஆதரவு பெருகும்போது நாம் அதிகமாக மகிழ்ச்சி அடைவதோ அல்லது சுய நலன்களைக் கொண்ட குழுக்களால் ஓரங்கட்டப்படும்போது மனச்சோர்வடைவதோ கூடாது.

கடந்த மூன்று வருடங்கள் தேசத்துக்கும், அதன் மக்களுக்கும், நமது இயக்கத்திற்கும் பெரும் குமுறலாக இருந்தன. பிரிவினைவாத, வகுப்புவாத பாசிச சக்திகள் மற்றும் அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான முன்னெடுப்புகள் மற்றும் வேறுபாடுகளை கடந்து அனைத்து குடிமக்களையும் சக்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளில் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா ஆண்டு அறிக்கையை வழங்கினார். இயக்கத்தினை மக்கள் அங்கீகரிக்கும் தன்மை சீராக அதிகரித்துள்ளதையும் மேலும் இயக்கம், குறிப்பாக வட இந்தியாவில் தனது கால் தடத்தை பதித்துள்ளதையும் ஆண்டு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அரசாங்கமும் அதன் பாதுகாப்பு ஏஜென்சிகளும் இயக்கத்தை குறிவைத்து வேட்டையாடுவதையும், இயக்கத்தின் பிம்பத்தை தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் குறித்தும் அறிக்கை சுட்டிக் காட்டியது. சமூக மேம்பாட்டுத் துறை நடவடிக்கைகளில் இயக்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்த கூட்டம் திருப்தி தெரிவித்தது. முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்ஸர் பாஷா அனைவரையும் வரவேற்றார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: