சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை CAA, NRC, NPR க்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது.
இதனையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து, இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 10 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ECR சாலையில் நடைபெற்ற மரியலில், காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், அதிமுக அரசிற்கு எதிராகவும் இஸ்லாமியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால், அதிரையில் பரபரப்பு ஏற்பட்டது.




Your reaction