டெல்லியில் கடந்த 8ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி தேர்தல் முடிவு மதவாத அரசியலுக்கு எதிரான மக்கள் கொடுத்த முடிவு என பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Your reaction