அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பு இந்தியாவில் சட்டவடிவடிம் பெற்றுள்ள CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்தியாவில் தொடர்ந்து வரும் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் எதிரொலியாக உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
அவ்வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வாழக்கூடியவர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக அமெரிக்கா வாழ் அதிரையர்கள் அதிகளவில் கலந்துக்கொண்டு இந்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.



Your reaction