சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி !!(படங்கள் , வீடியோ இணைப்பு)

2721 0


சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 3 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அரசின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் அதிரையை சார்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பேரூராட்சி   ஊழியர்கள் கலந்துகொண்டு , பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி ECR சாலை , பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு வழியாக சென்று வண்டிப்பேட்டையில் நிறைவு பெற்றது.

 வீடியோ இணைப்பு

இப்பேரணியில் பட்டுக்கோட்டை  R.D.O மற்றும் தாசில்தார் கலந்துகொண்டனர். அரசின் சார்பில் பொதுமக்களுக்கு , பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை  குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: