நாடு முழுவதும் இன்று 71-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
குடியரசு தின முக்கிய நிகழ்வாக பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முஹல்லாவாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலும் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது.






Your reaction