Friday, April 19, 2024

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் விஞ்ஞானி தான்… நக்கல் அடித்த கே.எஸ் அழகிரி..

Share post:

Date:

- Advertisement -

உள்ளாட்சி தேர்தலில் இணைந்து செயல்படுவதில் கூட்டணிக்களுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தியால், “ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசியுள்ளோம். இனி கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும், ஸ்டாலினும் பேசி தீர்வு காண்போம். மற்றவர்கள் பேச தேவையில்லை” என்றார்.

இந்நிலையில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், “திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி; உடைந்தது உடைந்தது தான். அதை ஒட்ட வைக்க இயலாது” என தெரிவித்தார். இந்த கருத்துக்கு வேலூர் மண்டிவீதியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுகவில் செல்லூர் ராஜூ மட்டுமே விஞ்ஞானி என நினைத்தோம். தற்போது ஜெயக்குமார் அவர்களும் ஒரு விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார்” என்று நக்கலாக பதில் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...