அதிரை: அனைத்து முஹல்லா 4வது ஆலோசனை கூட்டம், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கருத்துக்கள் பெறப்பட்டது..!!

1298 0


தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், அனைத்து முஹல்லா 4வது ஆலோசனை கூட்டம் கடந்த (16-01-2020) வியாழனன்று நடைபெற்றது.

இக்கூடமானது MMS. அபூபக்கர் தலைமையில் ஜாவியால் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து உலமாக்களும், முஹல்லா நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

துவக்கமாக திரு.அகமது கபீர் கிராத் ஓதி உரையை துவங்கி வைத்தனர்.

கூட்டமைப்பு துவங்கப்பட்டத்தின் நோக்கத்தை AAMF-ன் செயலாளர். திரு.M. நெய்னா முஹம்மது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு விளக்கினார்.

பின்னர் சமுதாய இயக்கங்களின் ( அதிரை பைத்துல்மால், TNTJ, SDPI, TMMK, PFI, MMK, MUSLIM LEAGUE, MJK, NTF) கருத்துகள் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து முஹல்லாவிலும் , உலமாக்களும் உறுப்பினர்கள் அதிரை முஹல்லா கூட்டமைப்பிற்கு சேர்க்கப்பட்டது.

இறுதியாக திரு.செக்கனா நிஜாம் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை முடித்து வைத்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: