அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

1017 0


அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 74 வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 10/01/2020 அன்று பத்ஹா RT-RESTAHRANT முதல் மாடியில் சகோ.நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் நடைபெற்றது. அதில் அதிரைவாசிகள் பலரும வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

A. சாதிக் அகமது (இணைத்தலைவர்)

இந்நிகழ்ச்சியில் தலைவர் S. சரபுதீன் முன்னிலை வகித்தார். பொருளாளர் N. அபூபக்கர் கிராஅத் ஓதினார். கொள்கை பரப்பு செயலாளர் P.இமாம்கான் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் A.M.அஹமது ஜலீல் சிறப்புரை ஆற்றினார். இணைத்தலைவர் A. சாதிக் அகமது நன்றியுரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :


1) அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தில் என்னென்ன செயல்பாடுகள் மற்றும் தொடர் சேவைகள் அல்லாஹ்விற்காக செய்து வருகிறார்கள் என்பதை விரிவாகவும, நமதூர் வாசிகள் கேட்ட கேள்விகளுக்கும் நிதானமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
74 ஆவது கூட்டம் சிறப்பு கூட்டமாக அமைந்தது, இதில் பல்வேறு கோணங்களில் பல்வேறு தரப்பு கேள்விகளுக்கு அவர்கள் நிறைவு அடையும் படி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

2) பென்ஷன் தாரர்களுக்கு பென்ஷன் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பதை விளக்கப்பட்டது. பென்சன் தாரர்களுக்கு உதவ ரியாத் மாநகரில் புதிதாக சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுத்தின் விளைவாக அல்ஹம்துலில்லாஹ் இதுவரை -26 நபர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்த அனைவர்களுக்கும் அல்லாஹ் மேலும் இறன- பரக்கத்தை மேலும் அபிவிருத்தி செய்ய துஆ செய்யப்பட்டது. மேலும் பென்ஷன் சம்பந்தமான விளக்கங்கள் தலைமை கழகத்தில் இருந்து வந்த கடிதத்தை P.இமாம்கான் அவர்களால் வாசிக்கப்பட்டு அதற்குண்டான பதில்களையும் விளக்கங்களையும் விரிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் படி எடுத்து சொல்லப்பட்டது.


3) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் செயல்பாடுகள் இன்னும் சிறந்து விளங்கிடவும், வலிமையோடும், மேலும் திறமையாக செயல்பட கூடுதலாக புதிதாக 3- பொறுப்புகளை, கீழ்காணும் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டது.


01.சகோ.நிஜாமுதீன் – ஆலோசகர் ( புதிய பொறுப்பு )ஜம்சித் அஹமது – இணை பொறுளாளர் (காலி இடம் பூத்தி செய்யப்பட்டது)

1. நெய்னா முஹம்மது – ஒருங்கிணைப்பாளர் ( புதிய பொறுப்பு )

2. ஜம்சித் அஹமது – இணை பொருளாளர் (காலி இடம் பூர்த்தி செய்யப்பட்டது)

3. நெய்னா முஹம்மது – ஒருங்கிணைப்பாளர்(புதிய பொறுப்பு) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மென்மேலும் சிறந்து விளங்கிட பாடுபடுவோம் என்று அல்லாஹ்வுக்காக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


4) சமீபத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அணைத்து தெருவாசிகள் சேர்ந்து ஊர், மற்றும் சமுதாய நலம் கருதி சம்பந்தமாக கூட்டம் நடத்தியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு முழு வெற்றியடைய துவா செய்யப்பட்டது.


5) அதிரையில் சமீபத்தில் வபாத்தான: மர்ஹும். ஹாஜா முகைதீன் (பாம்பை வாலா), மர்ஹும்.-மஜ்பா ஹாஜி எம்.ஏ அஸ்ரப் அலி. மற்றும் மர்ஹும். S.A.K கமாலுத்தீன் அவர்களுக்காக துவா செய்யப்பட்டு ஆழ்ந்த இரங்கள் தெரிவிக்கப்பட்டது.


6) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு FEBRUARY 2020 14-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப் தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: