‘ஆபரேஷன் பெயிலியர்; அப்பா நெல்லை கண்ணன் விடுதலை’- ரெண்டே வார்த்தையில் எச். ராஜாவுக்கு சீமான் பதிலடி !

1279 0


பிரபல பட்டிமன்ற பேச்சாளர், தமிழறிஞர் நெல்லை கண்ணன். இவர் டிசம்பர் 29-ந் தேதி மேலப்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டம் முழுவதும் பாஜகவை உண்டு இல்லை என ஆக்கிவிட்டார். பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என அனைவரையும் தனது பேச்சால் வெளுத்து வாங்கினார்.

நெல்லை கண்ணனின் இந்த ஒட்டுமொத்த பேச்சும் இணையத்தில் வைரலானது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, இவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீனை கோர்ட் வழங்கியது. காலையும் மாலையும் மேலப்பாளையம் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவதற்கு முன்னமேயே, தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தவர் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.. நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி, மெரினா வரை போய் தர்ணாவில் உட்கார்ந்து கைதும் ஆனார்.

இதையடுத்துதான் நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். நெல்லை கண்ணன் கைது என்ற செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே “ஆபரேஷன் சக்சஸ்” என்று ட்வீட்டினார் ராஜா… இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.

நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவிக்கும்போது, “மேடை பேச்சுகளுக்குக் கைது என்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்கத் தகுதியற்றவர்கள்.. அப்பா நெல்லை கண்ணன் கைது தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்” என்று கொதிப்புடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இப்போது நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து “ஆபரேஷன் சக்சஸ்” என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு, சீமான் பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்.. “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை… ஆபரேசன் பெயிலியர்!” என்று எச்.ராஜாவை சூசகமாக கிண்டல் அடித்துள்ளார். சீமான் போட்ட இந்த 2 வரி ட்வீட்டுக்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: