குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட இந்தியாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் உயிடப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று 4வது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள், மத்திய அரசு மற்றும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.




Your reaction