Friday, March 29, 2024

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு – ஜன. 2ல் வாக்கு எண்ணிக்கை !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று (06.12.2019) மாநில தேர்தல் ஆணையர், தலைமை செயலாளர், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.

இந்நிலையில் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (07.12.2019) மாலை 04.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது

வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 9- ஆம் தேதி முதல் தொடங்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16- ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19- ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணிக்கு நிறைவடையும். பதிவான வாக்குகள் 02.01.2020 அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பையடுத்து 9 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...