பெங்களூரு மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் வசந்தகுமார், கடந்த 3-ம் தேதி அம்மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் திடீரென காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வசந்த குமார் தான் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியுள்ளதாக கூறினார். பாஜக தலைவர்கள் காஃபி குடிக்க தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை கட்டாயப்படுத்தி பாஜகவில் இணைய சொன்னதாகவும் வசந்தகுமார் கூறியுள்ளார்.
கட்டாயப்படுத்தியதால் பாஜகவில் இணைந்தேன் என்று கூறிய அவர், நான் காங்கிரஸ்காரன் தான் என உறுதியாக கூறுகின்றேன் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது உடன் இருந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், “பாஜக எந்த அளவுக்கு கீழ் தரமான அரசியல் செய்யும் என்பதற்கு இதுவே உதாரணம் என்று கூறினார்.”
காங்கிரஸ் நிர்வாகி திடீரென பாஜகவில் இணைந்து 2 நாட்களில் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Your reaction