போயா வெங்காயம்.. பதைபதைக்கும் மக்கள்!!

818 0


சமையலறையில் அடிப்படை தேவையாக இருக்கும் வெங்காயத்தின் விலை சில இடங்களில் 150 ரூபாயைதொட்டுவிட்டது. மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெங்காயத்தின் விலையை குறைக்க இறக்குமதிக்கு பல சலுகைகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது  அது கைகொடுத்ததாக தெரியவில்லை. ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் இந்தியாவை வந்து சேர்ந்திருந்தாலும், தேவைக்கு ஏற்ப இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இன்று வரை விலை குறைந்தபாடாக இல்லை எனலாம். தேவைக்கு ஏற்ப வெங்காயத்தின் இறக்குமதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதே உண்மை. துருக்கி மற்றும் எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய அரசு வாக்குறுதியளித்திருந்த நிலையில், சென்னை போன்ற பெரு நகர பகுதிகளில்வெங்காயத்தின் விலை சற்று குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில் தரம் குறைந்த, குறைவான ஆயுளைக் கொண்ட ஆந்திரபிரதேச வெங்காயம் கூட 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அப்துல் காதர் மற்றும் சந்தை மேலாண்மைக் குழுவின் உரிமம் பெற்ற வணிகர்கள் சங்க தலைவர் சந்திரன் ஆகியோர் இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில் வெங்காயத்தின் விலையானது, ஒரு போதும் வாடிக்கையாளர்கள் இந்த அளவுகளை சந்தித்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்தளவுக்கு தற்போது வெங்காயத்தின் விலையானது வரலாறு காணாத விலையாக உள்ளது. வெங்காயம் தேவைக்கு ஏற்ப அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டும்.

ஏனெனில் தற்போது 20 சதவிகித பங்குகள் மட்டுமே இறக்குமதி செய்து அவற்றை தள்ளுபடி விலையில் விற்கவுள்ள, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது விலையை குறைக்க உதவாது. இன்னும் அதிகளவிலான முழு தேவைக்கும் ஏற்ப வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான் வெங்காயத்தின் விலை குறையும் என்று சந்திரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெங்காய உற்பத்தி குறைந்திருந்த போதிலும், மழையால் கணிசமான அளவு வெங்காயம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும் இறக்குமதியானது இன்னும் முன்பே செய்திருக்க வேண்டும்.

இதனால் விலையும் கட்டுக்குள் வந்திருக்கும் என்றும் வர்த்தகர்கள் மத்தியில் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் பெய்த மழையால் வெங்காய பயிர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெங்காயம் பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. அதே சமயம் உள்ளூர் சந்தைகளில் வெங்காயத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் விலை இன்னும் அதிகரித்துள்ளது.

இதே வழக்கமாக சந்தைக்கு 150 லாரிகள் வரும் இடத்தில், தற்போது 70 லாரிகள் மட்டுமே வந்து கொண்டிருப்பதாகவும், ,மும்பை (Agricultural Produce Market) கமிட்டியின் முன்னாள் தலைவர் அசோக் வாலுஞ்ச் தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் விலை தற்போது 140 – 150 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அடிப்படை தேவையாக வெங்காய இறக்குமதியை அரசு கூட்ட வேண்டும். விலையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே, இங்கு அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: