பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்(பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு)

1186 0


பாபர் மசூதி வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் இன்று (நவ.21) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா. பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குநர் கவுதமன், தமிழ்தேச அமைப்பின் தியாகு, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஹாரூண் ரஷீத், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். சரீப், தமிழர் விடுதலை கட்சியின் தோழர் இளமாறன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக மக்கள் முன்னணியின் பொழிலன், ஐ.என்.டி.ஜே. தலைவர் எஸ்.எம்.பாக்கர், என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தலைவர் பேரா.மார்க்ஸ், தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் அரங்க குணசேகரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீ.த.பாண்டியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் குமரன், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியாவின் அப்துல் ரஹ்மான், எம்.ஐ.எம். அமைப்பின் ஷம்சுதீன், சி.பி.எம்.எல். பாலசுப்பிரமணியன், வழ.ரஜினிகாந்த், காஞ்சி மக்கள் மன்றத்தின் ஜெஸி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்பு மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி உரையாற்றினர்.

பாபரி மஸ்ஜித் வழக்கில் ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் அல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனைக்கு உள்ளாக்குகின்றது. இத்தகைய தீர்ப்பு மதவெறி சக்திகளின் செயல்பாட்டை வலிமைப்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. முன்னாள் நீதியரசர்கள் தீர்ப்பில் காணப்படும் சுயமுரண்பாடுகளை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டுணர்ந்த உண்மைகள் தீர்ப்போடு முரண்படுகின்றன. பாபரி மஸ்ஜித் உள் வளாகத்தில் சிலை வைத்தது, மஸ்ஜிதை இடித்துத் தள்ளியதும் சட்டப்புறம்பானது எனில் அத்தகைய செயலைப்புரிந்த சட்டவிரோத சக்திகளுக்கு பிரச்சனைக்குரிய பாபரி மஸ்ஜித் வீற்றிருந்த நிலத்தை வழங்குவது எவ்வகையில் சட்டப்பூர்வமானது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இத்துனை ஆண்டுகாலம் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பிய சமூகத்திற்கு இப்படிப்பட்ட தீர்ப்பு எந்தவிதத்தில் நியாயமாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றம் பாபரி மஸ்ஜித் வழக்கில் தனது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பாபரி மஸ்ஜித் வழக்கை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி குரல் கொடுத்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: