மேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டது.
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பதவிக்கு நேரடி தேர்தல் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை மாற்ற தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தமிழக அரசு இன்று அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர்களை கவுன்சிலர்கள் ஒன்று கூடி தேர்வு செய்வது என அந்த அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுகமாக இந்த தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு அவசர சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது.
Your reaction