கேரள மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஐஐடி வளாகத்திலேயே போராடிய மாணவர்கள் !

1315 0


சென்னை ஐஐடியில் படித்த கேரளா மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். தமது தற்கொலைக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் உள்ளிட்ட மூவர்தான் காரணம் என ஃபாத்திமா தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதையடுத்து ஃபாத்திமாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். இதனடிப்படையில் போலீசார் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்டோரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஃபாத்திமா லத்தீபின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள் சென்னை ஐஐடி வளாகத்தின் முன்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை ஐஐடி மாணவர்களும் ஃபாத்திமா லத்தீபின் மரணத்துக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.

ஐஐடி வளாகத்துக்குள் ஃபாத்திமா மரணத்துக்கு நீதி கோரும் பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவியர் முழக்கங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். நேரடி விசாரணையில் இறங்கி உள்ள கமிஷனர் விஸ்வநாதன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் “மாணவி தற்கொலை குறித்த விசாரணை நடந்து வருகிறது. இன்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்த வழக்கு தற்போது சென்சிட்டிவாக மாறி விட்டதால், சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு ஃபாத்திமா தற்கொலை வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை இனி நடைபெறும். இந்த விசாரணைக் குழுவில் பல உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கூடுதல் துணை ஆணையர் மெகலீனா விசாரணை அதிகாரியாக இருப்பார். சிபிஐயில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி, பிரபாகரன் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இது சம்பந்தமான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.. விரைவில் புலன் விசாரணை முடித்து அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். இந்த விசாரணை முழுமையாக நடந்து முடியும் வரை தகவல்களை சொல்ல முடியாது. முழு விசாரணைக்குப் பின்னர் உண்மைகள் தெரிய வரும்” என்றார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: