அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் துவங்கி வைத்தார். இதில் பயணிகள், பொதுமக்கள் என சுமார் 400 நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாட்டினை அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழும நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Your reaction