‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்…’ – அசாம் பாஜக அரசின் சர்ச்சை உத்தரவு !

687 0


அசாம் மாநிலத்தில், பா.ஜ.க-வைச் சேர்ந்த சர்பானந்தா சோனோவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இன்று, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் அம்மாநிலத்தில் நடைபெற்றது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், `இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை’ என்ற அதிரடி அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், புதிய நிலக் கொள்கை (New Land Policy) திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலமற்ற பூர்வகுடி மக்களுக்கு விவசாய நிலங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான நிலங்களை வழங்க அந்தத் திட்டம் வழிவகுக்கிறது.

சிறிய குடும்ப விதிமுறையின்கீழ், 2021 ஜனவரி முதல் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்களுக்கு அரசாங்கப் பணி கிடையாது என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அசாம் சட்டப்பேரவையில் `அசாமின் மக்கள்தொகை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொள்கை’ (Population and Women Empowerment Policy of Assam) நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், இரண்டு குழந்தைகள் இருப்பவர்கள் மட்டுமே அரசாங்கப் பணிக்கு தகுதியுடையவர்கள். தற்போது, அரசு வேலைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அசாமில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘புதிய நிலக் கொள்கை (New Land Policy) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிலமற்ற பூர்வகுடி மக்களுக்கு, குறிப்பிட்ட அளவு நிலம் வழங்கப்படும். அதேபோல நிலமற்ற ஏழைமக்களுக்கு வீடு கட்ட நிலம் வழங்கப்படும். அதை அவர்கள் 15 ஆண்டுகளுக்கு விற்க முடியாது’ என்று அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து கட்டணத்தை 25 சதவிகிதம் உயர்த்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: