அதிரையில் பேருந்து நிலையம் அருகே உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் மாணவ மாணவியர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சி முகாம் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாணவ மாணவியர்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள் மறக்காமல் இருக்கவும் , பாடங்களில் கவனத்தை அதிகரிக்கும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் தினமணி நாளிதழ் நினைவாற்றல் பயிற்சியாளர் M.சரவண குமார் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கினார். இப்பயிற்சி முகாமில் அதிரையை சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

Your reaction