அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில் முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர் ஜவாஹிர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது. இதில் அடுத்த கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அமீரகத்தில் இருக்கும் கடற்கரைத் தெரு முஹல்லாவாசிகள் கலந்து கொண்டனர்.

Your reaction