அதிராம்பட்டினம் ஷம்ஷுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில்
73-வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பமாக இறைவேதத்துடன் நிகழ்வு தொடங்கியது.
சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் அறிமுக உரை ஆற்றினார். அடுத்து சங்கத்தின் தலைவர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்கள். சிறப்பு அழைப்பாளராக டாக்டர். ஹக்கீம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது, வாகன விபத்துகள் நடப்பதற்கு முறையற்ற வகையில் வாகனத்தை வேகமாக ஓட்டுவது்தினால் விபத்துகள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என்றும்,
அதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அடுத்து
உணவு பழக்க வழக்கங்களை முற்றிலுமாக நாம் அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக எந்த எண்ணெய்யாக இருந்தாலும் ஒரே தரமான எண்ணெய்யை உபயோகிக்க வேண்டும் என்றும், பொறிக்கும் போது அது ஒரு தடவைக்கு மேல் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்க வேண்டாம் என்றும், அதில் கவனமாக அனைவரும் இருக்க வேண்டும் என்று சொன்னார். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய் , கடலென்னை உபயோக படுத்துங்கள். குறிப்பாக ரீஃபைன்டு ஆயில் உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.
பின்னர் SISYA அமைப்பின் தலைவர் அஹமது அனஸ் நன்றியுரை கூறினார். பேராசிரியர் அப்துல் காதர் தேசிய கீதம் பாட அனைவரும் எழுந்து நின்றனர். இறுதியாக கஃபாரா ஓத பெற்று நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.
இந்த நிகழ்வை MFS. சலீம் தொகுத்து வழங்கினார். இதில் முஹல்லாவாசிகளும் , பொதுமக்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாக்களில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு இருக்கும் சாக்லெட் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
Your reaction