கேரளாவில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களில் 8 வயநாட்டில் 9 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 988 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 1.65 லட்சம் மக்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். கடுமையாக மழை பெய்து வரும் வயநாடு பகுதியில், 24,990 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.
கேரளா முழுவதும் கன மழை பெய்யும் என்று கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2 நாட்களில் 18 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம், நிலச்சரிவு என்ற இரட்டை தாக்குதலில் சிக்கியுள்ளது, கேரள மாநிலம்.
Your reaction