அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் புகழ்பெற்ற ஒன்றாகும் இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வருகைதரும் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
அவ்வகையில் கேரள மாநிலத்தில் இருந்து பலர் இம்மஜிலிஸில் கலந்துகொள்ள நாள் தோறும் வருகை புரிகின்றனர் .
அதில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதியன்று நடைபெற்ற புகாரி ஷரிஃப் மஜ்லிசில் கேரள கலமஞ்சேரி சட்டமன்ற உறுப்பினர் இப்ராஹிம் குஞ்சு கலந்துக்கொண்டார், அவருடன் கேரள மஞ்சேரி பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் அஷ்ரஃப் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கேரள பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த இப்ராஹிம் குஞ்சு, நாட்டின் வலிமையை பறைச்சாற்ற முஹல்லா கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும்,அது அதிராம்பட்டினத்தில் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக இப்ராஹிம் குஞ்சுவை நகர தலைவர் கேகே ஹாஜா நஜ்முதீன், நகர பொருளாளர் அபூபக்கர்,நகர மின்னணு ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது, முஸ்லீம் லீக் நகர பிரமுகர் முஹம்மது இக்ராம் ஆகியோர் கேரள சட்டமன்ற உறுப்பினரை வரவேற்றனர்.
Your reaction