திமுகவின் 15-வது அமைப்பு தேர்தலுக்கான உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் உள்ள ரத்தினம் திருமண மஹாலில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக தலைவர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஏனாதி. பாலசுப்பிரமணியன், அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன் மற்றும் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Your reaction