தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அஹ்லன் கலீஃபா. பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான இவருக்கு இன்று 07/06/2019 இரவு அதிரை செக்கடி பள்ளியில் திருமண நிக்காஹ் நடைபெற உள்ளது.
தனது திருமண அழைப்பிதழில் அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அழைப்பிதழுடன் விதைப்பந்துகளை வைத்து நேரில் சென்று வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி அது எவ்வகை விதை என்பதையும் விளக்கி, மரம் வளர்த்தல் மற்றும் பராமரிப்பு முறை பற்றியும் எடுத்துரைத்து வருகிறார்.
புதியதோர் முயற்சியான அவரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தனது திருமண நிக்காஹ்விற்கு வருகை தருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Your reaction