அதிரையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நகர செயளாலர் அப்துல் சமது அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் S.M.அப்துல் சலாம் அவர்கள் முன்னிலையில் அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துவக்கமாக முகம்மது இப்ராகிம் தாவூதி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க நகர து.செயளாலர் யாசர் அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நோன்பின் மாண்புகள் குறித்து மாநில செயளாலர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மாநில பொருளாளர்
எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது M.com அவர்கள் சகோதரத்துவம் குறித்து நாட்டில் நிலவும் சகிப்புத்தண்மை குறித்து உரை நிகழ்த்திய பின் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள், பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். பின்னர் மஃஹ்ரி தொழுகைக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது.
இதில் மாநில இளைஞர் அணி து.செயலாளர் அன்வர்பாஷா, குவைத் மண்டல IKP து.செயலாளர் அதிரை ராஜா, மாவட்ட பொருளாளர் பைசல் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு பஷிர் அஹமது, மாவட்ட து.செயலாளர்கள் சாகுல் ஹமீது, மதுக்கூர் ஜுபைர், ஒரத்தநாடு பாரீஸ் ரஹ்மான், அதிரை நகர பொருளாளர் ராஜிக் அஹமது, ஜியாவுல் ஹக், நபில், ஆரிப் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Your reaction