ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!!(படங்கள்)

2711 0
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க இன்று 5வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி , பின்னர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. 

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்-ரஹானே ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. நன்றாக விளையாடிய ரோஹித் சர்மா சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ரஹானேவும் தன் பங்கிற்கு 61 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ICC ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.


 

 Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: