தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் தஞ்சை தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் SS. பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடக பொறுப்பாளர் தோழர் லெனின் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், திமுக நிர்வாகிகள், தமுமுக-மமக பேரூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
Your reaction