இந்த திருக்குறளை ஓபிஎஸ்-ஈபிஎஸ் பார்க்காம படிக்கட்டும்… நான் இப்படியே கிளம்பிடுறேன்… சீமான் அட்டாக் !

1340 0


நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழ் மொழியின் செழுமை பற்றி விரிவாக பேசியதுடன், முதல்வர், துணைமுதல்வர், முக ஸ்டாலின் என அனைவரையுமே கடுமையாக விமர்சித்தார். அப்போது சீமான் பேசியவற்றிலிருந்து ஒரு சில:

“இதோ எழுதி இருக்கே திருக்குறள்.. இதை இங்க வேட்பாளரா நிக்குற ஸ்டாலினை சொல்ல சொல்லு.. இதை எழுதி படிக்காம சொல்ல சொல்லு.. பார்ப்போம்.. ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ பார்க்காம இதை சொல்ல சொல்லுங்க.. நான் இப்படியே பேசாம இறங்கி போயிடறேன்.

தமிழ்மொழி இறந்து போய் விட்டது. திமுக அதனை தடுக்க எதுவும் செய்யவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வருவோம் என்கிறது திமுக. இத்தனை ஆண்டுகள் என்ன செய்தது? தமிழை எழுதி வைத்துக்கொள்ளாமல் படிக்கத் தெரியாதவர்கள் ஸ்டாலின், ஓபிஎஸ்-இபிஎஸ்.

இப்ப நாட்டில என்ன இருக்கு? சாதி, மதம் இருக்கு. அடிச்சிட்டு செத்தா சுடுகாடு இருக்கு. வேற எதுவுமே கிடையாது. என் சாதியால் நான் சாதிச்சது இதுதான்னு யாராவது மேடை போட்டு சொல்ல சொல்லு பார்ப்போம். சாதீய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமா போயிடும். சாதி மத உணர்ச்சியை தூண்டு, மானிட குலத்தை பிரித்து தமிழ் சமுதாயத்தையே மொத்தமா முடிச்சிட்டான். தமிழன் எப்படிடா தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் ஆவான்? வந்த நீங்கதான்டா சிறுபான்மையினர்.

தமிழ்க்குடி மக்களை எப்படி சிறுபான்மைன்னு சொல்லுவே? அதிமுக 20 இடம் நிக்குது.. ஒரு இடமும் முஸ்லீமுக்கு தரல. திமுக 20 இடத்துல நிக்குது. ஆனா ஒ’ர இடம் முஸ்லீமுக்கு தரல. ஆனா நாங்க 5 இடம் ததந்திருக்கோம். வேற எவன் செய்வான்? செய்ய மாட்டான். இது ஓட்டுக்காக நாங்க செய்யல. என் இனத்துக்காக நான் செய்றேன்.

ஏன்னா தமிழ்சமூகம் என்ற அடிப்படையில் சீட் தந்திருக்கோம். ரொம்ப நாளா இவன் பேசிட்டு தான் இருப்பான். பெண்ணியம் பேசுவது, பெண் விடுதலை பேசுவது.. எல்லாம் வெறும் பேச்சுதான். நாங்கள் பெரியார் விரல் பிடித்து நடந்தோம் பெரியார் அடிச்சுவட்டில் தவழ்ந்தோம்..ன்னு வெறும் பேச்சுதான்! இந்தியாவிலேயே அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விக்கிற மாநிலம் தமிழ்நாடுதான். ஐ ஆம் வெரி ஃஹேப்பி.. இனி தப்பிக்கவே முடியாது ராஜா.. என்கிட்டதான் வந்தாகணும். ஒன்னும் செய்ய முடியாது. இனி ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின், யார் வந்தாலும் இது தெரியாது.

நீர் வளப்பெருக்கம்.. நீர் மேலாண்மை.. நீர்வளத்தை எப்படி பெருக்குவது.. கடல்நீரை சேமிக்காம துப்புக்கெட்ட இவர்கள், கடல்நீரை சுத்தப்படுத்தி அதை திருப்பி நமக்கு தரேன்னு சொல்றான். இதுக்கு 50 ஆயிரம் கோடியாம் ? எந்த முட்டாப்பய செய்வான் இதை ? ஏரி, குளங்களை வெட்டி நீர்த்தேக்கங்களை உயர்த்தி இருந்தால் தண்ணீரை எளிதாக பெற்றுவிடலாம்.

எத்தனை சாராய ஆலை அதிபர்கள் நாட்டின் முதல்வராக இருக்கிறார்கள் ? வெறும் சாராய ஆலை அதிபர்களை நாம முதல்வரா தேர்வு பண்ணிட்டு வர்றோம். இந்த டாஸ்மாக்கில்தான் கட்சிகள் பாஸ் மார்க் வாங்கி இருக்கு. திராவிட கட்சிகளில் எல்லாருக்கும் வயசாயிடுச்சு. அதனால் தான் மகன்களை இறக்கி விட்டுட்டு வர்றாங்க. அதிகமாக 5 ஆண்டுகளில் நாம் ஜெயிக்கப்போவது உறுதி. அதன்பிறகு என்ன ஆகிறது என பாருங்கள்.

நாம் தமிழர் ஆட்சியில் பட்டுப்பூச்சி வளர்த்தல், நெசவுத்தொழில், மீன் வளர்த்தல், பாய் பிண்ணுதல், கருப்பட்டி காய்ச்சுதல், கள் இறக்குதல், சர்க்கரை காய்ச்சுதல் ஆகியவை அரசு வேலைகளாக்கப்படும். குழந்தைகளுக்கு இலவச கல்விதான்.. யுகேஜி, எல்கேஜியே இருக்காது. அவை எல்லாம் அரும்பு, மொட்டு, மலர் வகுப்புகள் என்று அழைக்கப்படும். 1-ம் வகுப்பு 6 வயதிலிருந்து தான் சேர்க்கப்படும். விளையாட்டு தான் கல்வி. தாய்மொழியில் கல்வி வழங்கப்படும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: