நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிரைக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் அவர்கள் வருகை தந்தார். அப்போது திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தமைக்கு MMS வாடிக்கு சென்று அதிரை தாமகா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் கூட்டணி கட்சியான தமுமுக, மமக அலுவலகத்திற்கு வந்த அவரை, மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
அப்போது திமுக வேட்பாளர் SS. பழனிமாணிகத்தை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் பேட்டி கண்டார். அப்போது இஸ்லாமியர் நலன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஒளிப்பதிவாளரின் செல்போனை வாங்கி அந்த வீடியோவை அழித்துள்ளனர் அங்கிருந்த அரசியல் கட்சி தலைவர்கள்.
இரண்டு முறை மத்திய இணை அமைச்சராக உயர் பதவி வகித்த SS. பழனிமாணிக்கத்திற்கு ஊடகச் சுதந்திரம் தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. மேலும் கட்டாயமாக செல்போனை பிடுங்கி வீடியோவை அழிக்கும் அளவுக்கு அதில் ஆட்சேபனைக்குரிய கேள்விகள் எல்லாம் எழுப்பப்படவில்லை.
ஆனாலும் அந்த வீடியோவை ரீஸ்டோர்(restore) செய்து கீழே இணைத்துள்ளோம். ஊடகச் சுதந்திரத்தில் தலையிடும் எந்த ஒரு செயலையும் ஒருபோதும் ஏற்க முடியாது. மேலும் ஊடகச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
வீடியோ :
Your reaction