அதிராம்பட்டினம் எம்எம்எஸ் குடும்பத்தினர் மூப்பனார் மீதான பற்றின் காரனமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டனி அமைத்துள்ள அதிமுகவுக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குறித்து நிலைப்பாடு என்ன என அதிரை மக்கள் கேள்விகளை முன் வைத்து வந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று MMS வாடியில் அதிரை நகர தமாக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அதில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணியான திமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக நகர தமாகா தலைவர் கூறியுள்ளார்.
மேலும் தமாகாவில் இருந்து யாரும் வெளிவரவில்லை எனவும், இத்தேர்தலில் மட்டுமே திமுக ஆதரவு நிலை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், கட்சி மேலிடம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கு நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பை வழங்கிட உள்ளோம் என தெரிவித்தார்.
Your reaction