நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும்,21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பதாக இந்திய தேசியலீக்கின் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
சிறைவாசிகள் விடுதலை குறித்து சமூதாய இயக்கங்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வரும் இவ்வேளையில் அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசி வருகிறார். மேலும் அதிமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பாஜகவுக்கு இனி எந்த அதிமுக எந்த ஆதரவும் கொடுக்காது என சீரனி அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பட்டவர்த்தனமாக தெரிவித்தார்.
ஆனால் அவரிந் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக மாறியதை அமமுக தொடர்ந்து தோலுரித்து வருகிறது.
இந்நிலையில் அமமுக சிறைவாசிகள் விடுதலை குறித்த அழுத்தத்தை நாம் போற்றும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சி வருகிற நாடாளுமன்ற, சம இடைத்தேர்தலில் அமமுக கூட்டனி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .
Your reaction