நம்மிடம் மட்டும் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் அந்தப் பக்கம் யாரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் என்று தீவிரவாத முகாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் வந்துள்ளார். அப்போது ஜாம்நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
நமது விமானப் படையிடம் மட்டும் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் சூழ்நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும். நமது தரப்பில் இருந்து யாரும் மரணமடைந்திருக்க மாட்டார்கள்; அதே நேரம் எதிர் தரப்பில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் சிலருக்கு இதெல்லாம் புரியாது.
தீவிரவாதம் என்னும் நோயானது முற்றிலுமாக அழித்து ஒழிக்கப் பட வேண்டுமென்று தேசமே விரும்புகிறது. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், நமது படைகள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்தானே?
என்னையும் சேர்த்து நாம் அனைவருமே நமது படைகள் கு மீது கேள்விகள் கேட்காமல் நமபிக்கை வைக்க வேண்டுமா? இல்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
Your reaction