அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிவாசல் நமதூரின் முக்கிய பள்ளிவாசல் ஆகும்.
இந்த பள்ளி வாசல் தமிழக வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த பள்ளிவாசலின் நிர்வாகிகளாக மறைந்த இகபால் ஹாஜியார் உள்ளிட்ட முக்கிய நபர்களளின் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், இம்முறை துலுக்கா பள்ளிவாசல் ட்ரஸ்ட்டிகளுக்க்கான மனுதாக்கல் செய்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்தவாரம் சென்னையில் நடைபெற்றது.
அதன்பின் கீழ்கானும் நபர்கள் பள்ளியின் சொத்துக்களை நிர்வகிக்க வக்பு வாரியம் தேர்வு செய்தன.
அதன் பொருட்டு வக்பு வாரிய இன்ஸ்பெக்டர் ஹைதர் அலி அதிரைக்கு விஜயம் செய்து புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்.
தலைவராக தொழிலதிபர் ஹாஜி MS ஷிகாபுதீன் அவர்களை நியமித்து சான்று வழங்கப்பட்டன.
செயலாளராக ஜெமில் லப்பை அவர்களும், பொருளாளராக SS ஷாகுல் ஹமீது அவர்களையும் நியமனம் செய்தனர்.
மேலும் உள்ள நால்வர்கள் உறுப்பினராக நியமித்து உத்தரவு வழங்கப்பட்டன.
Your reaction