இரும்புப் பெண்மணி என்றும் அம்மா என்றும் தமிழக மக்களால் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரசியல் கட்சியினர் ஜெயலலிதாவின் நினைவுகளை பகிர்ந்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடினர். பல்வேறு தலைவர்கள் ஜெயலலிதாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் அமமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிரையில் மூன்று இடங்களில் அமமுகவின் கொடி ஏற்றப்பட்டது. இதில் அமமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Your reaction