தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் 23/01/2019 அன்று ஏரிபுறக்கரை புயல் பாதுகாப்பு மண்டபத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் KG பல்நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஏரிபுறக்கரை மகளிர் சுய உதவி குழு ஆகியோர் இணைந்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஏரிபுறக்கரை பொது மக்களுக்கு மாபெரும் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமை அதிரை ரோட்டரி சங்க தலைவர்: MK. முகமது சம்சுதீன், செயலாளர்: Z.அகமது மன்சூர்,
பொருளர்: S.,சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதிரை ஏரிபுறக்கரை கிராம தலைவர் திரு.ரவி முன்னிலை வகித்தார்..
இம் முகாமில் 326 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் KG பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்,
திரு.முகராஜ்,
வாஸன் கண் மருத்துவமனையின்
சார்பாக S.A.ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறப்பாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்..
இம்முகாமில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
Your reaction