தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அடுத்துள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவானன் வயது 32 இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் ஏற்படுத்திய கஜா புயலின் கோர தாக்குதலால் தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கலைவாணனுக்கு சொந்தமாக உள்ள பல தென்னைகளும் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாடு சென்ற கலைவாணன் அந்த கடனை திருப்பிக் கொடுக்கமுடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார்.மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயத்தையும் கண்டு இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் தனது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார் .அதனை தொடர்ந்து அவரது உடல் இன்று சொந்த ஊரான திட்டக்குடி கொண்டு வரப்படவுள்ளது. விவசாயி தற்கொலை சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Your reaction