கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வளர்களும், கட்சி சாரா நபர்களும், இளைஞர்களும் நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விழுந்தமாவடி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தார்பாய் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.
அப்போது தோப்புத்துறை இளைஞர்களிடம் அப்பகுதி மக்கள் புயலால் கடுமையாக சேதமடைந்த தங்கள் கோவிலை தற்காலிகமாக சீரமைத்து தருமாறு கேட்டுள்ளனர். உடனே அந்த இளைஞர்களும் புயலால் பாதிக்கப்பட்ட அக்கோவிலின் மேற்கூரைக்கு தார்பாய் அமைத்து கொடுத்தனர்.
தோப்புத்துறை இளைஞர்களின் மதங்களை கடந்த இந்த மனிதநேயச் சேவையை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
என்றென்றும் தொடரட்டும் இந்த சகோதரத்துவம் !
Your reaction