Thursday, March 28, 2024

குருதி கொடுக்க உறுதி எடுப்போம்..!

Share post:

Date:

- Advertisement -

⁠⁠⁠இன்றைய அவசரகதியான காலசூழலில் ஒவ்வொரு துறையிலும் நவீனமயமாகி உள்ளன. மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் உருவாக்குகின்றனர். ஆனால் அந்த உறுப்புகளை இயங்க செய்யும் முக்கிய பங்காக இரத்தம் இன்னும் செயற்கைபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த நவீன முறையை பயன் படுத்தி அந்த இறைவன் அளித்த இயற்கை இரத்ததை தானம் செய்ய முடியும்.

ஒவ்வொரு நாளும் இந்த அதிமுக்கியமான இரத்தத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

 

இரத்ததானத்தின் தேவைகள்

அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்கள் உயிர்காக்க இரத்தம் மிகவும் அவசியம்.

டெங்கு போன்ற உயிர்கொல்லி நோயால் பாதிக்கபட்டவர்களுக்கும் இரத்தத்தின் தேவை அவசியமாக உள்ளது.

அந்த இரத்தம் தட்டுப்பாட்டினை சரி செய்ய தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டர்கள், இளைஞர்கள் என பல நல்லுள்ளங்கள் இரத்த தனம் செய்வது மட்டுமல்லாது இரத்த தேவையுடையோருக்கு தேவையான இரத்த வகை உள்ளவர்களை தொடர்புபடுத்தி உதவுகின்றனர். இதற்காக நம் இணையதளத்தின் சிறு முயற்சி தான் இது.

இத்தளத்தின் மூலம் இரத்த தேவையுடைவர்களுக்கு சரியான முறையில் இரத்தம் கிடைத்திட முன்வருவோம்.

இரத்த தானம் எவ்வளவு முக்கியமோ அதை எவ்வாறு செய்ய வேண்டும் யார் யார் செய்யவேண்டும் செய்ய கூடாது என்பது அதிமுக்கியம்.

ரத்த தானம் செய்ய நிபந்தனைகள்:

45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது

HIV, cancer, Diabetics, Blood pressure, வலிப்பு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்யக் கூடாது.

மது அருந்தியவர்கள் செய்யக் கூடாது.

ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள், Typhoid, Malayria, Dengue, Hepatitis என பெரும் காய்ச்சலினால் நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.

மாதவிடாய்க் காலங்களில், கர்ப்பக் காலங்களில் உள்ள பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் செய்யக் கூடாது.

மற்ற இரத்த தானம் செய்ய தகுதியான உடல் ஆரோக்கியமான யார் வேண்டுமானாலும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதால் மற்ற உயிரை காப்பாற்றுவது மட்டுமல்லாது இதன் மூலம் நம் உடலில் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

எனவே குருதி கொடுக்க உறுதி எடுப்போம்..!

 

Register Here — http://adiraixpress.com/?page_id=2220

 

ஆக்கம்: முஸ்தாக் அகமது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...